மேற்கு வங்க அரசுத் தரப்பில் கே.கே.வுக்கு அரசு மரியாதை 
செய்திகள்

பாடகர் கே.கே.வுக்கு இன்று இறுதிச் சடங்கு

மும்பையில் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு இன்று பகல் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

DIN

மும்பையில் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு இன்று பகல் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.கே., அவர் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க சென்றபோது உடல்நலக் குறைவால் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார்.

இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலை கொல்கத்தாவில் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டு முழங்க மாநில அரசின் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் மூலம் கே.கே.வின் உடல் மும்பை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு காலை முதல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, பகல் ஒரு மணியளவில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT