செய்திகள்

'அன்புள்ள சூர்யா தம்பி...சாரி தம்பி சார்': சூர்யாவிற்கு பதிலளித்த கமல்

விக்ரம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சியான பதிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

DIN

விக்ரம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சியான பதிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

மிகுந்த  எதிர்பார்ப்புக்கு இடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடியான சண்டைக்காட்சிகளும், திருப்புமுனைகளும் நிறைந்த இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் தோன்றியுள்ள நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்கும் கனவு நனவானது. இதை செய்துகாட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இத்தனை அன்பைப் பார்க்கும்போது திழைப்படைகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் பதிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இது நீண்ட நாள்களாக நடக்க இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அன்பு உங்களுக்கு ஏற்கெனவே இருக்கிறது. அதனை மேலும் மக்களிடம் அதிகரியுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள் தம்பி, மன்னிக்க தம்பி சார்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT