செய்திகள்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ரத்து

சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், இந்தாண்டுக்கான  ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், இந்தாண்டுக்கான  ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஜூன் 2022 இல் நடைபெறவிருந்த 25வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்று ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழு கூறுகையில்,

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவைக் கவனித்து, ஆதரிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிபந்தனைகள் அனுமதித்தால், இதன் இரண்டாம் பாதியில் தொடர்புடைய திரைப்பட விழாக்கள் மற்றும் கருப்பொருள் நிகழ்வுகளை திட்டமிட்டு நடத்துவோம் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT