செய்திகள்

''என்னைப் பற்றி பேசுவதற்கு பதிலா...'' - சிவாங்கி கொடுத்த பதிலடி

குக் வித் கோமாளியில் தன்னைப் பற்றி விமர்சித்தவருக்கு சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார். 

DIN

குக் வித் கோமாளியில் தன்னைப் பற்றி விமர்சித்தவருக்கு சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணமூர்த்தி சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ரா ரா என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி கலக்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதன் காரணமாக அவருக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில்  நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்தப் படம் வெற்றிபெற்று, ரூ.100 கோடி வசூல் செய்தது. 

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவாங்கி, இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் ட்விட்டரில் ஒருவர், குக் வித் கோமாளியில் சிவாங்கி இல்லாததை எண்ணி மகிழ்வதாக தெரிவிக்க, ''இல்லாத என்னைப் பற்றி பேசி வெறுப்பாவதற்கு, இருக்கின்ற நல்ல கோமாளிகள் குறித்து பேசினால் சிறப்பாக இருக்கும் சகோ. சிந்தியுங்கள்'' என்று சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT