செய்திகள்

''அவர் என்ன பண்ணாலும் தங்கம்'' - நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

அமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட்மோர் நடிகர் கமல்ஹாசன் குறித்து புகழாரம் தெரிவித்துள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல வரவேற்பை கிடைத்துவருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படம் ரூ.25 கோடி வசூலித்துள்ளதால் விநியாகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சிரஞ்சீவி தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். அப்போது ஹிந்தி நடிகர் சல்மான் கானும் உடனிருந்தார். சிரஞ்சீவி நடித்துவரும் காட் ஃபாதர் படத்தில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம் படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட் மோர் நடிகர் கமல்ஹாசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விக்ரம் படம் வெற்றிபெற்றதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர் ஒருவர், நீங்கள் விக்ரம் படத்தைக் காண வேண்டும் என வேண்டுகோள்விடுக்க, அதற்கு பதிலளித்த மெக்கென்ஸி, எனது திரைப்பட பணிகளை முடித்ததும் நிச்சயம் விக்ரம் படத்தை பார்ப்பேன். அவர் என்ன செய்தாலும் அது தங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மெக்கென்ஸி வெஸ்ட்மோரின் தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர்  கமல்ஹாசனின் இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களுக்கு மேக்கப் பணிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கென்ஸியின் பதிவிற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், நாம் விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநகரச் செயலாளரின் ஜாமீன் மனு: கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஒன்பிளஸ் நோர்டு 6 விரைவில் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

நீதிபதி மீது காலணி வீசி கடவுள்தான் என்னைத் தூண்டினார்! - வழக்குரைஞர் Rakesh Kishore | B.R. Gavai

ஆரஞ்ச் அலர்ட்.... சங்கீதா!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

SCROLL FOR NEXT