செய்திகள்

ரூ. 300 கோடி வசூலைத் தொட்ட முதல் கமல் படம்: விக்ரம் சாதனை

விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

DIN

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் விக்ரம் படம் 11 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை அள்ளியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் கண்ட படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2013-ல் வெளியான கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியது. 

தமிழ்நாட்டில் விக்ரம் படத்தின் வசூல் ரூ. 150 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளிய படமாக தமிழில் டப் செய்யப்பட்ட கன்னடப் படமான கேஜிஎஃப் 2 இருந்தது. அதன் வசூலை விக்ரம் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!!

வரம் தரும் வாரம்!

குஜராத்தில் பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது: 5 பேர் காயம்!

நடிகை ராஜேஸ்வரி தற்கொலை!

தொடர்ந்து 17 டி20 போட்டிகளில் அரைசதம் அடிக்காத ஷுப்மன் கில்..! இந்திய அணிக்கு தேவையா?

SCROLL FOR NEXT