செய்திகள்

இதுதான் நடிகர் விஜய்யின் 'தளபதி 66' படத் தலைப்பா ? ரொம்ப பழசா இருக்கே!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று பரவிவருகிறது. 

DIN

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி 67 படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று பரவிவருகிறது. 

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இதன் காரணமாக விஜய் தற்போது நடித்துவரும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்தப் படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, ஜெய சுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். மகேஷ் பாபு இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு வாரிசு அல்லது வெறித்தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில்,  வாரிசு என்ற தலைப்பு மிகவும் பழைய பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

துணை நடிகை மீது தாக்குதல்: வியாபாரி கைது

SCROLL FOR NEXT