செய்திகள்

வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு 3வது போஸ்டர்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) இந்தப் படத்துக்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும்  வெளியானது. 

போஸ்டர் மற்றும் தலைப்பு ரசிகர்களைக் கவரவில்லை என்பதை ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகள் காட்டின. ஆனால் இன்று (ஜுன் 22) வெளியான இரண்டாவது போஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் 3வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கின் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். 

வாரிசு என்ற தலைப்பை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளிப்படுத்திவருகின்றனர். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வாரிசான விஜய், தனது குடும்பத்துக்கு வரும் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT