முகப்பு
செய்திகள்

வாரிசு - இரண்டாவது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 22 ஜூன், 2022 at 11:56 AM
பகிர்:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

நேற்று(செவ்வாய்க்கிழமை) வாரிசு படத்தின் முதல் தோற்றப் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 3-வது போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.