முகப்பு
செய்திகள்

பூஜையுடன் துவங்கும் நடிகர் அஜித்தின் 'ஏகே 61'

நடிகர் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம்  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவுடன் நல்ல வசூலைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாம்.

இதனையடுத்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் படத்துக்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று (மார்ச் 9) நடைபெறவிருக்கிறதாம். 

இந்தப் படத்தில் 'நட்புனா என்னனு தெரியுமா', 'லிஃப்ட்', 'ஆகாசவாணி' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக 'வலிமை' படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் அல்லது அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலும் வருகிற மார்ச் 19 அன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும்  இந்த வருட தீபாவளக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.