செய்திகள்

இன்று 'ரஜினிகாந்த்' பிறந்த நாள்: எப்படி தெரியுமா? சுவாரசியத் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் திரையுலக வாழ்வில் முக்கியமான நாள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

DIN

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், ''எல்லோருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள். 

எங்களுக்கு இந்த நாளை கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இன்றுதான் இயக்குநர் கே.பாலசந்தர், சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிகாந்த் என பெயர் வைத்தார்'' என்று குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

முன்னதாக இயக்குநர்கள் சங்க விழாவில் இயக்குநர் கே.பாலசந்தரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார். அப்போது, உனக்கு நான் எப்பொழுது ரஜினிகாந்த் என பெயர் வைத்தேன் தெரியுமா என கே.பாலசந்தர் கேட்க, அதற்கு ரஜினிகாந்த், ஹோலி பண்டிகையன்று  என அவர் பதிலளிக்க அரங்கம் அதிர்ந்தது.

இதன் காரணமாக, ஒவ்வொரு ஹோலி பண்டிகையன்றும் இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்து ஆசி பெறுவதை நடிகர் ரஜினிகாந்த் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கூடுதல் வட்டி தருவதாக ரூ. 55 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

காவிரி கரை பாதுகாப்பு கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவிலில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

களக்காட்டில் இன்று மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT