செய்திகள்

''இது பெரியார் மண். தமிழக முதல்வர் எங்களுக்கு உதவனும்'': பிரபல திரைப்பட இயக்குநர் கோரிக்கை

DIN

இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு. பழனியப்பன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'கள்ளன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்று (18.03.2022) வெளியாகியுள்ளது. 

'கள்ளன்' என்ற பெயர் தங்கள் சாதியை இழிவுபடுத்துவதாக கூறி குறிப்பிட்ட சாதி அமைப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். இதுதொடர்பாகபடத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த சாதிக்கும், படத்துக்கும் சம்மந்தமில்லை எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்க நிலையில் படத்தின் இயக்குநர் சந்திரா மற்றும் தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் சந்திரா, ''படத்தை திரையிட்டால் திரையை கிழிப்போம் என திரையரங்குகளுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கள்ளன் படத்தை திரையிட நிறைய திரையரங்குகள் முன் வரவில்லை. 

நாங்கள் குறிப்பிட்ட சாதி சார்ந்து எந்த பதிவையும் எங்கள் படத்தில் வைக்கவில்லை. நீண்ட நாட்களாக போராடி இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வந்திருக்கிறோம். கள்ளன் என்ற சொல் திருட்டை குறிக்கும் சொல்லே தவிர, ஒரு சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. 

இதன் மூலம் முதல்வருக்கு நான் தெரிவிக்கவிரும்புவது என்னவென்றால், இது பெரியார் மண். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

திரையரங்களுக்கு கள்ளன் திரையிடக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை முதல்வர் கவனித்து படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்'' என கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT