செய்திகள்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்து கருத்து தெரிவித்த ஐஏஎஸ்: நடவடிக்கை கோரும் பாஜக

DIN

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை குறித்து கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விமர்சனங்களும், ஆதரவும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து மத்தியப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் தனது சுட்டுரைப் பதிவில், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் காட்ட தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, மனிதர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ராஜ்னேஷ் அகர்வால், நியாஸ் கான் விளம்பரத்திற்காக இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவரது செயல்களை மாநில அரசு உணர்ந்து உரிய முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT