செய்திகள்

''எனக்கும் இரண்டு மகள்கள் இருக்காங்க'': 'மன்மத லீலை' பட விழாவில் வெங்கட் பிரபு விளக்கம்

மன்மத லீலை படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவின் பேச்சு வைரலாகி வருகிறது.  

DIN

'மாநாடு' படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மன்மத லீலை'. அசோக் செல்வன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். ராக் ஃபோர்ட் எண்ட்ர்டெயின்மென்ட் நிறுவனமும், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இந்தப் படத்தின் கிளிம்ஸ் விடியோவும், டிரெய்லரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  முத்தக் காட்சிகள் மற்றும் கதாநாயகிகளுடனான நெருக்கமான காட்சிகளும் அதிகம் இருந்ததே பரபரப்புக்கு காரணம். 

இந்த நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ''நல்ல இளைஞனின் வாழ்வில் ஒரு சிறிய தவறு, எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுதான் மன்மத லீலை படத்தின் கதை. இதை ஜாலியா சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இது வயதுவந்தோருக்கான படம்தான். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் தனித்தனியாகவோ அல்லது காதலர்கள், கணவன் - மனைவிகளாக பார்த்தாலும் இந்தப் படம் பிடிக்கும். 

இந்த படத்தில் நாகரிகமாக பேசியிருக்கிறோம். முகம் சுழிக்கிற மாதிரியான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இந்தப் படத்தில் இல்லை. இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் என்னால் அப்படி பண்ண முடியாது. எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்காங்க. எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழனும் என்பதற்காக இந்தப் படம் உருவாகியிருக்கிறோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விஜய் பிரசாரம்! காவல்துறை அனுமதி கோரி மனு!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!

நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

SCROLL FOR NEXT