செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ இவர்தான்

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜேசூர்யா இணைந்து நடித்த 'மாநாடு' கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. நடிகர் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. 

மாநாடு படம் தாமதமானதால் அந்த இடைவேளையில் இயக்குநர் வெங்கட் பிரபு 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கியிருந்தார். அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 

இதனையடுத்து வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார். இது வெங்கட் பிரபுவின் முதல் நேரடி தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்புவுக்கு 'மாநாடு' படத்தைப் போல, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படம் நாக சைதன்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT