செய்திகள்

''இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்'': பாலா இயக்கத்தில் நடிப்பது குறித்து சூர்யா நெகிழ்ச்சி

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  

DIN

'நந்தா', 'பிதாமகன்' படத்துக்கு பிறகு 3வது முறையாக பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று(28/03/2022) துவங்கி நடைபெற்று வருகிறது. 

இதனை அறிவிக்கும்விதமாக பாலாவுடன் எடுத்துக்கொண்ட படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, ''என்னுடைய குரு பாலா அண்ணா ஆக்சன் என சொல்வதற்காக இத்தனை நாளாக காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு அது நடந்திருக்கிறது. உங்களுடைய வாழ்த்துகள் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தை சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த 'நந்தா' திரைப்படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யாவை சிறந்த நடிகராக திரையுலகுக்கு அடையாளம் காட்டியது.

பிறகு பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து 'பிதாமகன்' படத்தில் அவர் நடித்திருந்தார். அதுவரை அமைதியான வேடத்தில் நடித்துவந்த சூர்யா, 'பிதாமகன்' படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார். 

பின்னர் பாலா தயாரிப்பில் 'மாயாவி' படத்தில் சூர்யா நடித்திருந்தார். மேலும் அவன் இவன் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தவறாக சித்திரிக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களால் மனமுடைந்த பிரியங்கா மோகன்!

ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு! | TVK | Vijay

தமிழக விவசாயிகள் இந்தியளவில் முன்மாதிரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பி

புது தில்லியில் தீபாவளிக்கு 5 நாள்கள் பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT