அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விருது விழா நடைபெற்ற டால்பி திரையரங்கில் இன்று எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அவர் இன்று வென்றுள்ளார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அந்த விருதை அவருக்கு வழங்கப்பட்டது.
அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.