செய்திகள்

ஏப். 2ஆம் தேதி 'பீஸ்ட்' டிரைலர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் 'நாளை' என்று தனது சுட்டுரையில் நேற்று குறிப்பிட்டது பீஸ்ட் டிரைலரைத்தான் என்று ரசிகர்கள் கணித்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் டிரைலர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் உளவுத் துறை அதிகாரியாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளதாலும், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் பல்வேறுதரப்பட்ட ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் தற்போது டிரைலர் அப்டேட்டை வெளியிட்டு 'நம்ம ஆட்டம் இனி வேற லெவல்ல இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT