சூர்யா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படம் சர்வதேசப் பட விழாவில் இரு விருதுகளை வென்றுள்ளது.
2டி தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்த ஜெய் பீம் படம் கடந்த வருடம் ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற பாஸ்டன் சர்வதேசப் பட விழாவில் ஜெய் பீம் படம் இரு விருதுகளை வென்றுள்ளது. இண்டீ ஸ்பிரிட் சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோ ஜோஸுக்கும் இண்டீ ஸ்பிரிட் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.