முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சந்தித்த நடிகர் விஜய் 
செய்திகள்

அடுத்தடுத்து முதல்வர்களை சந்திக்கும் நடிகர் விஜய்

நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார்.

DIN

நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார்.

தமிழின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பில் தீவிரமாகியுள்ளார். அவரது 66ஆவது படத்தில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தெலங்கானா சென்றுள்ள நடிகர் விஜய் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தன்னுடைய நீலாம்பூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

படிநிலைகள்... அமலா பால்!

உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்கோடா இந்தியா!

SCROLL FOR NEXT