செய்திகள்

நடிகராக அறிமுகமாகும் சிவாஜியின் மற்றொரு பேரன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கதாநாயகன் உருவாகிறார். 

DIN

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கதாநாயகன் உருவாகிறார். 

சிவாஜி குடும்பத்தில் அவருடைய மகன்களான பிரபு, ராம்குமார் ஆகியோர் நடிகர்களாக உள்ளார்கள். பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் ராம்குமாரின் மகன்களான துஷ்யந்த், சிவாஜி தேவ் ஆகியோரும் திரையுலகில் நடிகர்களாக ஏற்கெனவே அறிமுகமான நிலையில் இன்னொரு வாரிசும் நடிகராகவுள்ளார்.

ராம்குமாரின் முதல் மகன் துஷ்யந்த், சக்சஸ், மச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மற்றொரு மகனான தர்சன் கணேசன் திரையுலகில் கதாநாயகனாக  அறிமுகமாகிறார். புணே நகரில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ள தர்சன் - தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களில் நடித்துள்ளார். தர்சன் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT