செய்திகள்

அமெரிக்க இணையத்தொடருக்கு தீம் இசை வழங்கிய இளையராஜா

நெட்பிளிக்ஸில் வெளியாகும் அமெரிக்க இணையத்தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீம் இசை வழங்கியுள்ளார்.

DIN

நெட்பிளிக்ஸில் வெளியாகும் அமெரிக்க இணையத்தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீம் இசை வழங்கியுள்ளார். இதன் விடியோ வெளியாகியுள்ளது. 

மே 27 முதல் ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4-ம் பாகத்தின் இணையத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இயக்கம் - டஃபர் பிரதர்ஸ். தமிழ், தெலுங்கிலும் இத்தொடரை ரசிகர்கள் காண முடியும். 4-ம் பாகத்தின் முதல் 8 நிமிடங்கள் சமீபத்தில் வெளியாகின. 

இந்நிலையில் வழக்கமாகத் தனது படங்களைத் தவிர மற்ற படங்களின் இசையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இளையராஜா, ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4 தொடருக்கு தீம் இசையை வழங்கியுள்ளார். அதன் வழக்கமான பின்னணி இசையுடன் தன்னுடைய இசையையும் கலந்து தந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT