முகப்பு
செய்திகள்

ஜெயிலர் வெளியீடு குறித்து தகவல்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  வெளியீட்டுத் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 நவம்பர், 2022 at 11:05 AM
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  வெளியீட்டுத் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

’ஜெயிலர்’ படத்திற்குப் பின் லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.