மீண்டும் பாலிவுட் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’ விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | 'அப்படியா?’ துணிவு புதிய அப்டேட்: மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
தமிழில் ஃபர்ஹானா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஹிந்தியில் ‘மாணிக்’ என்கிற புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார்.
முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு டாடி என்கிற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். தற்போதும் மீண்டும் பாலிவுட் சென்றுள்ளார்.