பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனை பற்றிய வரலாற்று படத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சரித்திரப் படமொன்றில் நடிக்க உள்ளார். மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன் முறையாக மராத்தி படத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வசீம் குரேஷி தயாரிப்பில் மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் சிவாஜியின் கனவுகளை உணமையாக்க போராடிய 7 வீரர்கள் பற்றியது என படக்குழு தெரிவித்துள்ளது. மாராத்தியில் உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே இந்த பட அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த படம் குறித்து நடிகர் அக்ஷய் குமார், “எனது கனவு நனவானது. சத்ரபதி சிவாஜியை திரையில் பிரதிபலிப்பதி மிகப்பெரிய பொறுப்பு. இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில் முதன்முறையாக இணைவது மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
இயக்குநர் மகேஷ் மஞ்சுரேகர் இது எனது கனவுப் படம். இதற்காக 7 வருடம் ஆராய்ச்சி செய்து வந்துள்ளேன்”என தெரிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்தப் படம் பெரு வெற்றியடைய படக்குழுவிற்கு வாழ்த்துகள். பாலாசாகேப் தாக்கரே மாராத்தி சினிமாவுக்காக நின்றவர். ராஜ் தாக்கரேவும் மாராத்தி சினிமாவுக்கு துணையாக இருப்போம்” என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.