செய்திகள்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது நடிகை புகார்! 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி புகார் அளித்துள்ளார். 

DIN

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி புகார் அளித்துள்ளார். 

தமிழில் 'இனிது இனிது காதல் இனிது' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகவானவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  அவரது இசையில் வெளியான புஷ்பா, தி வாரியர் பட பாடல்கள் மிகவும் புகழ்பெற்றது.  

சமீபத்தில் இவர் ‘ஓ பெண்ணே’ எனும் இசை ஆல்பத்தினை வெளியிட்டார். தெலுங்கில் இதற்கு ‘ஓ பரி’ என்ற பெயரில் வெளியானது. ரகீப் ஆலம் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இதில் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற வரிகள் வரும்போது பெண்கள் ஆபாச உடை அணிந்து வருமாறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மத உணர்வுகள் பாதிக்கப்பட்டதாக நடிகையும் ராஷ்ட்ரிய இந்து கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவருமான கராத்தே கல்யாணி மற்றும் இந்து ஜனசக்தி தலைவர் லலித் குமார் ஆகியோர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். 

இந்த பாடல் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT