செய்திகள்

வில்லனாக நடிக்கும் வடிவேலு?

நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கொடூர வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கொடூர வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் வடிவேலு தனக்கென தனித்துவமான உடல் மொழி, வசன உச்சரிப்பு மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். நாம் சாதாரணமாக
பேசும்பொழுதே 'வேணாம்.. வலிக்குது... அழுதுருவேன்... என்னா அடி! இப்பவே கண்ணக்கட்டுதே' என சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரது வசனங்களைத் தான் பேசுகிறோம். 

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் நடிப்பதைக் குறைத்துக்கொண்டாலும் தொலைக்காட்சிகள், சமூக வலைதள மீம்ஸ்கள் என இன்றும் அவர் ட்ரெண்டிங்கில்தான் இருக்கிறார். 

தற்போது மீண்டும் முழு வீச்சில் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் வடிவேலு. சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகனாக நடிக்கும் வடிவேலு அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

தற்போது, ‘தில்லுக்கு துட்டு’ படத்தினை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வடிவேலுவை கொடூர வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் உறுதியாகுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT