செய்திகள்

பாபி சிம்ஹாவின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டர்!

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடன இயக்குநர் பிருந்தாவின் இரண்டாவது திரைப்படமான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயராகிவரும் நிலையில், அப்படத்தின் முதல்பார்வையைப் படக்குழுவினர் செப்டம்பரில் வெளியிட்டனர். 

கன்யாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘மும்பைக்கார்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள்  விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே. சுரேஷும் நடித்துள்ளனர். 

இந்நிலையில் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளில் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படத்தில் துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் இன்னும் விஜய் மற்றும் தவெகவை அடிக்க ஆரம்பிக்கவில்லை! - Annamalai | TVK Vijay | BJP

பிப். 9 முதல் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு! சென்னையில் அல்ல பெங்களூரில்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு: 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம்

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

ராணி முகர்ஜியின் ஒரேயொரு பியூட்டி சீக்ரெட் இதுதான்!

SCROLL FOR NEXT