செய்திகள்

விஜய் பட வில்லனும் அஜித் படத்தின் குழந்தை நட்சத்திரமும் இணையும் புதிய படம்! 

அர்ஜீன் தாஸ், அனிகா சுரேந்திரன் இணைந்து நடித்துள்ள ‘புட்ட பொம்மா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

அர்ஜீன் தாஸ், அனிகா சுரேந்திரன் இணைந்து நடித்துள்ள ‘புட்ட பொம்மா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

கைதி, மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜீன் தாஸ் வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார்.  இவர் முதன் முறையாக ‘புட்ட பொம்மா’ எனும்  தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். இதில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் மற்றும்  சூர்யா வசிஸ்டரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சந்திரசேகர் டி ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

தனுஷின் வாத்தி படத்தின் தயாரிப்பாளர் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கணேஷ் குமார் ரவுரி என்பவர் வசனம் எழுதியுள்ளார். டீசரின் இறுதியில் பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

ஆசிரியா் திலகம் விருதுக்கு 10 போ் தோ்வு

கீழக்கடையம் ரயில்வே சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்த தில்லி பாஜக எம்பிக்கள்

தாக்குதலில் முதல்வா் ரேகா குப்தாவுக்கு பலத்த காயம் -கபில் மிஸ்ரா தகவல்

SCROLL FOR NEXT