செய்திகள்

நடிகர் கமலை வாழ்த்திய பிரபலங்கள்!

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

DIN

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன். ஒரு இணையற்ற கலைஞனாக, எங்களை தொடர்ந்து நீங்கள் ஆச்சரியப்படுத்துறீர்கள். ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கையை சமரசமின்றி நீங்கள் கடைபிடிப்பது எங்களை ஊக்குவிக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும், உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்.

நடிகர் மோகன் லால்

மாபெரும் நடிகர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் எங்களை ஊக்கப்படுத்தி ஆச்சரியப்படுத்துங்கள்.

இயக்குநர் ஷங்கர்

இந்தியன் 2 படத்தின் போஸ்டரை பகிர்ந்து, 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நடிகை குஷ்பு

எனது இனிய நண்பரே, உங்கள் பிறந்தநாளில் உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது மரியாதையான அன்பான நட்பைக் நான் கொண்டாடுகிறேன். லவ் யூ சார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

SCROLL FOR NEXT