செய்திகள்

ஆண்ட்ரியாவின் பாடலை வெளியிடும் கனிமொழி கருணாநிதி!

வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'அனல் மேலே பனித்துளி' படத்தின் பாடலை வெளிடுகிறார் எம்.பி. கனிமொழி. 

DIN

கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் பல புதிய இயக்குநர்களை வெற்றிமாறன் அறிமுகம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜெய்சர் ஆனந்த் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். 

ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'அனல் மேலே பனித்துளி' என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வெற்றி மாறனின் விருப்பமான ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். 

இந்தப் படத்தின் 3வது பாடலின் ப்ரோமோவை திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி அவர்கள் நாளை (நவ.8)  காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘எது நான் எங்கே’ என்ற இந்தப் பாடலை உமாதேவி எழுதியிருக்கிறார். 

வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ஆம் நாள் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT