முகப்பு
செய்திகள்

ஹன்சிகா சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம்!

நடிகை ஹன்சிகா தனது படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்கு முன்பு சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
பகிர்:

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. சில வருடங்களாக தமிழில் படம் நடிக்கவில்லை. சமீபத்தில் மஹா எனும் படம் வெளிவந்தது. அதுவும் பழைய படம் காலம் தாழ்த்தி ரிலீஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் புதிய தமிழ் படமொன்றில் நடிக்கிறார். அதுவும் ஏற்கனவே அவர் நடித்த சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிக்கிறது. மெட்ரோ படத்தில் கவனம் பெற்ற ஷிரிஸ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். பிரிகடாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படம் காமெடி கலந்த ஹாரர் வகையில் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் தரிசனத்திற்கு ஹன்சிகா, இயக்குநர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.