செய்திகள்

பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு!

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

DIN

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது. ஜனசேனா என்பதற்கு தெலுங்கு மொழியில் மக்கள் இராணுவம்.

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் சனிக்கிழமை ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்படம் எனும் கிராமத்தை எப்படி அடைந்தார் என்ற விடியோ சமீபத்தில்  வைரலானது. பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஓடும் காரின் ஓரத்தில் தொங்குவதைக் காணலாம். பவன் கல்யாணின் பின்னால் இருந்த காரில் மேலே அமர்ந்து பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். ஆதரவாளர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றனர். மேலும் ஒருவர் காரில் தொங்கிக்கொண்டு அவரை விடியோ எடுத்துக்கொண்டு சென்றார். 

அவர் வேகமாக கார் ஓட்டி சென்றதால் பைக்கில் சென்ற சிவக்குமார் என்பவர் கீழே விழுந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரினைப் பெற்ற காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT