செய்திகள்

பவர் ரேஞ்சர் நட்சத்திரம் ஃபிராங்க் காலமானார்

பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

DIN

பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

அமெரிக்காவில் 1973-ல் பிறந்தவர் ஃபிராங்க். 1993 முதல் 1996 வரை மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்தார் ஃபிராங்க். இந்தத் தொடர் இளைஞர்களிடம் மிகவும் புகழ்பெற்றது. முதலில் கிரீன் ரேஞ்சராக நடித்தார் ஃபிராங்க். இந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு அளித்ததால் ஒயிட் ரேஞ்சராகவும் குழுவின் தலைவராகவும் மாற்றப்பட்டார். அந்தத் தொடரில் மொத்தமாக 123 எபிசோட்களில் அவர் நடித்தார். ஃபிராங்க், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஃபிராங்குக்கு முதல் திருமணத்தில் மூன்று குழந்தைகளும் 2-வது திருமணத்தில் ஒரு குழந்தையும் உள்ளார்கள். 

இந்நிலையில் ஃபிராங்க் மறைந்துவிட்டதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவர் எப்போது, எதனால் இறந்தார் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபிராங்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

லோகநாயகி...கல்யாணி பிரியதர்ஷன்!

ஆசை ஆசையாய்... ஜீவிதா!

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

SCROLL FOR NEXT