செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ புகழ் பாடும் அமுல் விளம்பரங்கள்!

அமுல் விளம்பரத்தில் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இடம்பெற்றுள்ளார்கள். 

DIN

அமுல் விளம்பரத்தில் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இடம்பெற்றுள்ளார்கள். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரோஜா முதல் பொன்னியின் செல்வன் வரை தொடரும் மணி ரத்னம் - ரஹ்மானின் 30 வருடக் கூட்டணியைப் பாராட்டும்விதமாக விளம்பரம் செய்துள்ளது அமுல் நிறுவனம். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஹ்மான். மேலும் பொன்னியின் செல்வன் படத்தைப் புகழ்ந்தும் மற்றொரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணி அதிரடியாக விளையாட இவர்கள் இருவரும்தான் காரணம்: அஸ்வின்

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT