செய்திகள்

நித்தம் ஒரு வானம்: முதல் பாடல் வெளியானது!

அசோக் செலவன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்திலிருந்து ‘உனக்கென நான்’ எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

அசோக் செலவன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்திலிருந்து ‘உனக்கென நான்’ எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நித்தம் ஒரு வானம்’. வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள  இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

சுபாவாக ரிது வர்மா, மதியாக அபர்ணா பாலமுரளி, மீனாட்சியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்தப் படத்திலிருந்து ‘உனக்கென நான்’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. கிரித்திகா நெல்சன் எழுதியுள்ள இப்பாடலை கோபி சுந்தர் இசையமைக்க தீப்தி சுரேஷ், தீபக் பாடியிருக்கிறார். 

இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT