செய்திகள்

நடிகராக களமிறங்கிய கிரிக்கெட் வீரர் தவான்

DIN

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் முதன்முறையாக நடிகராக களமிறங்கியுள்ளார். 


கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் முதன்முறையாக திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஹிந்தியில் உருவாகியுள்ள டபுள் எக்ஸ்எல் படத்தில்தான் ஷிகர் தவான் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் காலா, வலிமை படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹூமா குரேஷியுடன் இணைந்து தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ஜாகீர் இக்பால், மங்காத்தா, சென்னை 28 2 உள்ளிட்ட படங்களில் மூலம் பிரபலமான மஹத் ராகவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ஷிகர் தவான் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் நடனமாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் சத்திரம் ரமணி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT