செய்திகள்

நடிகர் தனுஷூடன் இணையும் சூப்பர் ஸ்டார்!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிரபல நடிகர்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிரபல நடிகர்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். 

மேலும், தென்காசியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர்  உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களைப்போல் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது. 

நடிகர் ஷிவ ராஜ்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT