செய்திகள்

'சர்தார்' டிரைலர் எப்போது? அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சர்தார் படத்தை விஷாலின் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார்.

மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ். 

சர்தார் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் நாளை(அக்.14) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! இரு காவலர்கள் கவலைக்கிடம்!

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT