செய்திகள்

கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி ஆகியவை ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக தகவல்

கார்டூன் நெட்வொர்க் மற்றும் சுட்டி டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கார்டூன் நெட்வொர்க் மற்றும் சுட்டி டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்றைய கால குழந்தைகளுக்கு  பொழுதுபோக்குவதற்காக செல்போன் கேம்ஸ்கள் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. நிறைய கார்டூன் சேனல்களும் வந்துவிட்டன. ஆனால் 90களின் குழந்தைகளுக்கு கார்டூன் தொலைக்காட்சி என்றாலே அது கார்டூன் நெட்வொர்க் மட்டும்தான். 

ஸ்கூபி டு, பவர்பஃப் கேர்ள்ஸ், டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் போன்ற பல கார்டூன் தொடர்கள் குழந்தைகளை குதூகலத்துடன் வைத்திருக்க உதவியது. முதல் நாள் இந்தத் தொடர்களைப் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் இதுகுறித்து உரையாடுவதில் ஒரு அலாதி மகிழ்ச்சி இருக்கும்.

கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபரில் தான் தனது ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இதே அக்டோபரில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளது. கார்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்.

இதே போல தமிழில் முதன்முறையாக குழந்தைகளுக்கென்றே அறிமுகமான சுட்டி டீவியும் விரைவில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT