செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு திருமணமா? 

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரான ஜாக்கி பக்னானியுடன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரான ஜாக்கி பக்னானியுடன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். கடந்தாண்டு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போதிலிருந்தே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. 

தற்போது இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் ரகுல் ப்ரீத் சிங் அதனை மறுத்துள்ளார். 

அவரது சகோதரர் அவரது திருமணத்தைப் பற்றி கூறியதாக சொல்லப்பட்ட தகவலுக்கு, “என்னுடைய வாழ்க்கைப் பற்றிய செய்தி எனக்கே தெரியவில்லை” என நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT