முகப்பு
செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகிறது 'வாரிசு' முதல் பாடல் - தமன் என்ன சொல்கிறார்?

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வருகிற 23 ஆம் தேதி ஞாயிறன்று வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தீபாவளி எனக் குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

முன்னதாக ''வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள்'' என தமன் ட்வீட் செய்திருந்தார். நடிகர் விஜய் வாரிசு படத்துக்காக பாடல் பாடியதைத் தான் அவர் தெரிவிக்கிறார் என பலரும் தங்களது கணிப்பை வெளிப்படுத்தினர். 

துணிவு படத்தின் அப்டேட் வெளியாகுமா என அஜித் குமார் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.