செய்திகள்

பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபலம்

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இதில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள், பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையிலும் பசுபதி கலக்கியிருப்பார். 

மேலும் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கேஜிஎஃப்பில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்பைடாயகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT