இலங்கை ரசிகர் ஒருவர் வரைந்த தனது படத்தினை நடிகர் விஜய் ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது ரசிகர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது இலங்கையை சேர்ந்த ரசிகர் கஜேந்திரா கே.ஆர்.எஸ் என்பவர் விஜய் புகைப்படத்தினை டிஜிட்டல் ஓவியமாக வரைந்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்புப் படமாக மாற்றியுள்ளார் நடிகர் விஜய்.
இதனைப் பகிர்ந்த இலங்கை ரசிகர், “இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. முறை தான் ஒரு முறை தான் நீ பார்த்தால் அது வரமே. நன்றி தலைவா!” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.