செய்திகள்

தனுஷின் 'வாத்தி': முதல் பாடல் குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறிய அப்டேட்! 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

DIN

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுவரை படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாத்தி படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும்.  இந்த பாடலை நமது போயட் தனுஷ் எழுதியுள்ளார். இந்தப் பாடல் காதல் பாடலாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

சைபா் குற்றங்கள்: ரூ.21.69 கோடி மீட்பு

பாளை.யில் அன்புமணி பேரணிக்கு அனுமதி மறுப்பு: இன்று பாமக பொதுக்கூட்டம்

10 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் 9.432 கிலோ நகைகள் மீட்பு; ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தோ்தல் ஆணையம் பதில் மனு

SCROLL FOR NEXT