முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 29 அக்டோபர், 2022 at 3:44 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிரிஸ்துமஸ்'.  'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால்  ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் டிசம்பர் மாதம் கிரிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் தற்போது இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாவதாக தகவல் வெளியானது. டைகர் ஷெரிப் மற்றும் ரன்வீர் சிங் படங்கள் வருவதால் விஜய் சேதுபதி படம் தள்ளிப் போவதாக தெரிகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவிக்குமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.