செய்திகள்

விஷாலுடன் காதலா? பிரபல நடிகை விளக்கம்!

நடிகர் விஷாலை காதலிப்பதாக வதந்திகள் எழுந்ததைத் தொடர்ந்து பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார். 

DIN

நடிகர் விஷாலை காதலிப்பதாக வதந்திகள் எழுந்ததைத் தொடர்ந்து பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார். 

தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

அவருக்கு ஜோடியாக நடிகை அபிநயா நடித்து வருகிறார்.  நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா ஈசன், பூஜை, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்திலும் அஜித் குமாரின் சகோதரருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில், விஷாலுடன் நடிகை அபிநயா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டன. இதன் விளைவாக இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. 

இந்நிலையில், நடிகை அபிநயா மார்க் ஆண்டனி குறித்தும் அதில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்தும் விளக்கம் அளித்து விஷாலுடனான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடிப்பதால், கணவன், மனைவியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான் இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகவும், படப்பிடிப்புக்காக சேர்ந்த எடுத்த புகைப்படங்கள் அவை எனவும் விளக்கமளித்துள்ளார். 

இந்தப் படங்களை வைத்து நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவுகின்றன. அது முற்றிலும் பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT