செய்திகள்

இசைஞானியும் இசைப்புயலும் ஒன்னா சேர்ந்தா...! - ரஹ்மான் பகிர்ந்த விடியோ

இளையராஜாவுடன் இருக்கும் விடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

நடிகர்களில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித் போல எப்பொழுதும் ரசிகர்கள் அதிகம் விவாதித்துக்கொள்வது ராஜாவா ? ரஹ்மானா ? என்றுதான். அந்த அளவுக்கு இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் இருவரும் இணக்கமாகவே பழகிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன் துபையில் உள்ள ரஹ்மானின் ஒளிப்பதிவு கூடத்துக்கு இளையராஜா சென்றிருந்தார். விரைவில் அங்கு தனது படங்களுக்கு இசையமைக்கவிருப்பதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவுடன் விமான நிலையத்தில் இருக்கும் விடியோவைப் பகிர்ந்து, ''நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதும் தமிழ்நாடுதான். இளையாராஜா புதாபெஸ்டில் இருந்தும், ரஹ்மான் கனடாவில் இருந்தும் திரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இது இருவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை', லக்ஷமி ராமகிருஷ்ணன் படம், தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியின் படம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். 

ரஹ்மான் இசையில் தற்போது 'கோப்ரா' திரைப்படம் வெளியான நிலையில் இந்த மாதம் 15 ஆம் தேதி சிம்பு மற்றும் கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு', மாத  இறுதியில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT