செய்திகள்

வெளியானது சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட பிம்பிலிக்கி பிலாப்பி பாடல்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது. 

DIN

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது. 

டாக்டர், டான் என அடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

SCROLL FOR NEXT