செய்திகள்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இயக்குநர் ஷங்கர் விமர்சனம் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை இயக்குநர் ஷங்கர் பதிவு செய்துள்ளார்.  

DIN

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை இயக்குநர் ஷங்கர் பதிவு செய்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 18 ஆம் தேதி வெளியான படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்', ஹிந்திப் படமான 'அத்ரங்கி ரே', 'மாறன்', ஆங்கிலப் படமான 'தி கிரே மேன்' ஆகிய 4 படங்களும் ஓடிடியில் வெளியாகின. இதனால் திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

'திருச்சிற்றம்பலம்' படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''திருச்சிற்றம்பலம் - அழகான படம். இந்தப் படத்தில் ரசிக்கக் கூடிய தருணங்களைத் தொடர்ந்து வரும் வலிமிகுந்த காட்சிகள் தான் இந்தப் படத்தின் அழகு. நித்யா மேனன் கதாப்பாத்திரமும் அவர் நடிப்பும் மனதைக் கவர்ந்தது. மித்ரன் ஜவஹரின் எழுத்தும் குறிப்பிடத்தகுந்தவை. பாரதிராஜாவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் எனது அன்பு'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT